M K Stalin met Sonia Gandhi and Rahul Gandhi : காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
M K Stalin met Sonia Gandhi and Rahul Gandhi : காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
Published on: May 23, 2025 at 9:15 pm
புதுடெல்லி, மே 23 2025: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தி.மு.க. மூத்தத் தலைவர் டி.ஆர் பாலு உடனிருந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார்.
இந்தக் கூட்டம் நாளை (மே 24 2025) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் மு.க ஸ்டாலின் அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இதற்காக மு.க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் ராகுல் மற்றும் சோனியா காந்தியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசினார்.
அரசியல் முக்கியவத்துவம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் அரசியல் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணைகள் துரிதமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பேராசிரியர் அலி கான் விடுதலை.. சிறையில் இருந்து வெளியேறினார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com