மம்தா பானர்ஜியை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்.. பா.ஜ.க சுவேந்து அதிகாரி!

Suvendu Adhikari : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என அவரை எதிர்த்துக் களம் காணும் பா.ஜ.கவின் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Published on: March 19, 2026 at 7:05 pm

கொல்கத்தா, மார்ச் 19, 2026: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலில், திமுக தலைவர் மம்தா பானர்ஜியை குறைந்தது 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2021-இல், மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர், அவர் பவானிபூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், மம்தா பானர்ஜியை பவானிபூர் தொகுதியில் குறைந்தது 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து பேசிய சுவேந்து அதிகாரி, “நான் உள்ளூர் வாக்காளர்களுடன் பேசினேன், அவர்களின் மனதை அறிந்துகொண்டேன். மம்தா பானர்ஜி எந்த சவாலையும் ஏற்படுத்தவில்லை. நான் அவரை குறைந்தது 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன். இது இரண்டாவது முறையாக இருக்கும்.” என்றார்.

பவானிபூர் தொகுதி

பவானிபூர் தொகுதி, கொல்கத்தா தெற்கு லோக்சபா தொகுதியின் ஒரு பகுதியாகும்; இதில் கொல்கத்தா மாநகராட்சியின் எட்டு வார்டுகள் அடங்கும். இந்நிலையில், சுவேந்து அதிகாரி தனது பிரசாரத்தை சக்ரபேரியா பகுதியில் தொடங்கினார்.
இதற்கிடையில், சுவேந்து அதிகாரி பவானிபூர் மற்றும் நந்திகிராம் தொகுதிகளில் வேட்பாளராக களம் காண்கிறார். இவர், நந்திகிராமில் அவர் 2016 முதல் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீனாவின் புதிய இந்தியத் தூதர்.. யார் இந்த விக்ரம் துரைசாமி?

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பிய மத்திய அரசு Iran Israel War

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பிய மத்திய அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com