Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Published on: March 31, 2026 at 3:31 pm
புதுடெல்லி, மார்ச் 31, 2026: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, புதுடெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்த சிகிச்சை முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வீடு திரும்பினார்.
இவர் உடல் முழுவதும் பரவிய தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அதாவது, மார்ச் 24 இரவு காய்ச்சலுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், “சோனியா காந்தியின் உடல்நிலை குறிப்பிடத்தக்க முறையில் மேம்பட்டுள்ளது, இன்று காலை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்” என்றார். மேலும், “டாக்டர் டி. எஸ். ராணா, டாக்டர் எஸ். நுண்டி, டாக்டர் அருப் பாசு ஆகியோரின் மேற்பார்வையில், அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, “சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் பதிலளித்தார். தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டில் மருத்துவ ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பீகார் சீதலாதேவி கோவிலில் கூட்ட நெரிசல்.. 8 பேர் மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com