Sikh family attacked in MP: மத்தியப் பிரதேசத்தில் சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காங்கிரஷ் எம்.எல்.ஏ சீக்கியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டார்.
Sikh family attacked in MP: மத்தியப் பிரதேசத்தில் சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காங்கிரஷ் எம்.எல்.ஏ சீக்கியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டார்.
Published on: August 17, 2025 at 11:25 am
போபால், ஆக.17 2025: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் என்ற பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட தகராறில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு இந்திய (என்.ஆர்.ஐ) குடும்பம் கற்களால் வீசி தாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அந்த சீக்கிய குடும்பம் பயணித்த காரும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கோஹாட் தாலுகாவில் உள்ள ஃபதேபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஸ்டேஷன் சாலையில் வியாழக்கிழமை (ஆக.14 2025) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர், கோஹாட் சௌராஹா காவல் நிலையம் அருகே உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆதரவு
மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள கோஹாட்டில் நடந்த போராட்டத்தில் உள்ளூர் காங்கிரஸ் எம்எல்ஏ கேசவ் தேசாய் கலந்து கொண்டார்.
அப்போது, , கான்ஸ்டபிள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்வதாகக் கூறுகிறார்.
எஸ்.பி பேட்டி
இந்தச் சம்பவம் குறித்து பேசிய காவல் துறை போலீஸ் சூப்பிரண்டு, “தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ஒரு தாக்குதல் அல்ல. இது இருவருக்கும் (என்.ஆர்.ஐ மற்றும் போலீஸ்காரர்) இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு.
இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. நான் என்.ஆர்.ஐ குடும்பத்தினரிடம் பேசியுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com