தேசியவாத காங்கிரஸ் ஒருங்கிணைப்பு.. அஜித் பவாரின் விருப்பம் இதுதான்.. ஷரத் பவார்

Sharad Pawar: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பை அஜித் பவார் விரும்பினார் என ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

Published on: January 31, 2026 at 2:39 pm

மும்பை, ஜன.31, 2026: மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் சமீபத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பை விரும்பினார் என ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் அணி பாரதிய ஜனதா கூட்டணியிலும், ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி சிவசேனா- காங்கிரஸ் கூட்டணியிலும் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தது.
இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிப் பெற்ற நிலையில், அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்தில் அஜித் பவார் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பை விரும்பினார் என ஷரத் பவார் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “பிப்ரவரி 12 அன்று அஜித் பவார் மற்றும் ஜெயந்த் படீல் ஆகியோர் என்.சி.பி. கட்சியின் இரு பிரிவுகளையும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் தானும் அந்த இணைப்பை விரும்பினார்” என்றார்.

எனது விருப்பமும்…

தொடர்ந்து, “ஷரத் பவார் கூறியதாவது:
“துரதிர்ஷ்டவசமாக, அஜித் பவாரின் விமான விபத்து காரணமாக இணைப்பு பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. எங்களின் விருப்பமும் இரு தரப்பும் ஒன்றாக சேர வேண்டும் என்பதே.” என்றார்.

ஜூலை 2023-இல் என்.சி.பி. (NCP) கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டது. அப்போது அஜித் பவார், கட்சியின் 54 எம்.எல்.ஏ.களில் 40-க்கும் மேற்பட்டவர்களைத் தனது பக்கம் அழைத்து, பாஜக தலைமையிலான மகாயுதி அரசில் இணைந்தார். இந்தப் பிளவுக்குப் பிறகு, ஷரத் பவார் தனது பிரிவை “நேஷனலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டி – ஷரத்சந்திர பவார்” என்று பெயரிட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: முறிந்து விழுந்த விமான சிறகு.. அஜித் பவர் மரணத்தில் ஒளிந்திருக்கும் மூன்று காரணம்.. முழுமையான அலசல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com