ரயில் கட்டணம் உயர்வு.. உடனே செக் பண்ணுங்க!

Train fare hike: இந்திய ரயில்வே டிசம்பர் 26, 2025 முதல் ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

Published on: December 21, 2025 at 1:54 pm

Updated on: December 21, 2025 at 2:06 pm

புதுடெல்லி, டிசம்பர். 21 2025: ரயில் கட்டணம் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 500 கிலோமீட்டர் வரையிலான ரயில்களுக்கு ரூபாய் 10 மட்டும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கட்டண உயர்வு விவரங்கள்

  • சாதாரண வகுப்புகளில் 215 கிலோ மீட்டருக்கு மேல் கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • 500 கிலோமீட்டர் வரையிலான ரயில்களில் ரூபாய் பத்து கட்டணம் உயர்த்தப்படுகிறது.
  • மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் கிலோ மீட்டருக்கு ரூபாய் இரண்டு பைசா உயர்த்தப்படுகிறது.
  • புறநகர் ரயில் சேவைகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை
  • சீசன் டிக்கெட்டுகளுக்கும் சாதாரண வகுப்புகளில் 215 கிலோ மீட்டர் வரையும் கட்டணம் உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் ரயில் டிக்கெட் கட்டணம் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த ரயில் டிக்கெட் கட்டண உயர்வு மூலம் ரூபாய் 600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, ஏழு யானைகள் உயிரிழப்பு!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com