வாடிகன் புறப்பட்டார் திரௌபதி முர்மு.. போப் ஆண்டவருக்கு அஞ்சலி.!

President Draupadi Murmu leaves for Vatican: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாடிகன் புறப்பட்டார்.

Published on: April 25, 2025 at 11:08 am

புதுடெல்லி ஏப்ரல் 25 2025 : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் 2025 ஏப்ரல் 21ஆம் தேதி திங்கட்கிழமை மரணம் அடைந்தார். போப் பிரான்சிஸ் இன் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 88 வயதான போப் ஆண்டவரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
போப் ஆண்டவர் மரத்திலான சவப்பெட்டியில் கையில் ஜெப ஆலையுடன் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்த குடியரசு தலைவர் திரவுபதி இன்று (ஏப்ரல் 25 2025) வாடிகன் புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு மற்றும் இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்பட பல்வேறு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்: போருக்கான அழைப்பு என்கிறது பாகிஸ்தான்!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com