Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்.
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்.
Published on: June 30, 2025 at 10:14 am
ஹைதராபாத், ஜூன் 30 2025: பிரபல தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்வேட்சா வோடர்கர், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அதாவது, ஹைதராபாத் சிக்கட்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவஹர் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28 2025) அதிகாலையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஸ்வேட்சா தனது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது தற்கொலையாக இருக்கலாம்” என்றார். மேலும், தவறான நடத்தை உள்ளிட்ட பிற சாத்தியக்கூறுகளையும் போலீசார் நிராகரிக்கவில்லை. இதற்கிடையில், சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை, இருப்பினும் அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com