PM Narendra Modi inaugurated the Vizhinjam seaport: கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 2 2025) தொடங்கிவைத்தார். ₹8,867 கோடியில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
PM Narendra Modi inaugurated the Vizhinjam seaport: கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 2 2025) தொடங்கிவைத்தார். ₹8,867 கோடியில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Published on: May 2, 2025 at 7:43 pm
திருவனந்தபுரம், மே 2 2025: கேரளத்தின் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் (மே 2 2025) கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் இதனை சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பினராய் விஜயனும், சசி தரூரும் இருப்பது “பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரும்” என்று குறிப்பிட்டார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கேரள முதலமைச்சருக்கு (பினராயி விஜயன்) நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இந்தியா கூட்டணியின் மிகவும் வலுவான தூண். சசி தரூரும் இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரும்” என்றார்.
തിരുവനന്തപുരത്തു നടന്ന പരിപാടിയിൽ, പരിശുദ്ധ ഫ്രാൻസിസ് മാർപാപ്പയ്ക്കു ശ്രദ്ധാഞ്ജലിയർപ്പിച്ചു. pic.twitter.com/CVbXmwjt7e
— Narendra Modi (@narendramodi) May 2, 2025
இருப்பினும், பிரதமரின் கருத்தை துல்லியமாக வெளிப்படுத்துவதில் மொழிபெயர்ப்பாளர் சிரமப்பட்டதாகத் தெரிகிறது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை வெள்ளிக்கிழமை (மே2 2025) பிரதமர் நரேந்திர மோடி முறையாகத் திறந்து வைத்தார்.
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) நிறுவனத்தால் ₹8,867 கோடியில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் போக்குவரத்து துறைமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அஸ்ஸாம் ஐகோர்ட் சங்கத்தில் இருந்து ஹிமாந்த பிஸ்வாஸ் ராஜினாமா; பரபரப்பு பின்னணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com