மேற்காசிய மோதல்.. பெரும் சவால்களை சந்திக்கும் இந்தியா.. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி!

Narendra Modi: மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல், இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Published on: March 23, 2026 at 4:31 pm

புதுடெல்லி, மார்ச் 23 2026: மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் முக்கியமான அளவு கச்சா எண்ணெய் கடத்தப்படுவதால், அங்கு ஏற்படும் பதற்றம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை பாதிக்கக்கூடும் என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், நாட்டின் எரிசக்தி மற்றும் மின்சார தயார்நிலையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மின்சாரம், உரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் விரிவாக ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தேவையான எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடையின்றி நடைபெற தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20% நடைபெறுவதால், அங்கு ஏற்படும் எந்த மோதலும் உலக பொருளாதாரத்தையும் எரிசக்தி விலைகளையும் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, முன்னெப்போதும் சந்தித்திராத சவால்களை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது; மேற்காசியாவின் நிலைமை கவலை தருகிறது. மேற்காசிய போர்ச்சூழலை அமைச்சர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப தினந்தோறும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எதிர்வரும் சாகுபடி காலத்திற்கான உரம் கையிருப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தையும் எரிசக்தி சந்தையையும் பாதிக்கும் சூழ்நிலை உருவாக்கியுள்ளதால், மாற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது, எத்தனால் கலவை போன்ற மாற்று எரிபொருள் திட்டங்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி தேவைகளை 41 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருவதாக கூறினார்.

இதையும் படிங்க : பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸூக்கு தாவல்.. யார் இந்த நந்திதா?

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா! Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com