BJP President Nitin Nabin: பாரதிய ஜனதா கட்சி விவகாரங்களில் இவர் எனது பாஸ் என பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் நிதின் நபீன் குறித்து கூறியுள்ளார்.
BJP President Nitin Nabin: பாரதிய ஜனதா கட்சி விவகாரங்களில் இவர் எனது பாஸ் என பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் நிதின் நபீன் குறித்து கூறியுள்ளார்.

Published on: January 20, 2026 at 4:35 pm
Updated on: January 20, 2026 at 4:36 pm
புதுடெல்லி, ஜன.20, 2026: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபீன் செவ்வாய்க்கிழமை (ஜன.20, 2026) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், “கட்சி விவகாரங்களில் இவர் எனது பாஸ்” எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “நிதின் ஜி, ஒரு வகையில் மில்லேனியல் தலைமுறையைச் சேர்ந்தவர். இந்தியாவில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை நேரடியாகக் கண்ட தலைமுறையைச் சேர்ந்தவர்.
சிறுவயதில் வானொலியில் செய்திகளை கேட்ட காலத்திலிருந்து இன்று செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்ற காலம் வரை வந்தவர்,” என்றார்.
Speaking from the @BJP4India HQ in Delhi.
— Narendra Modi (@narendramodi) January 20, 2026
https://t.co/h3T6CWg7OA
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக, நிதின் நபின் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள ஜெ.பி. நட்டாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, திங்கட்கிழமை நடைபெற்ற வேட்புமனு தாக்கல் செயல்முறையில், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
प्रधानमंत्री श्री @narendramodi की उपस्थिति में भाजपा के नवनिर्वाचित राष्ट्रीय अध्यक्ष श्री @NitinNabin ने पदभार ग्रहण किया। pic.twitter.com/KplMj7XPSu
— BJP (@BJP4India) January 20, 2026
இந்நிலையில், பாஜக டெல்லி தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தலைவர்கள் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரின் பங்களிப்பை பாராட்டினார்.
மேலும், புதிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், “கட்சித் தொடர்பான விஷயங்களில் அவர் என் மேலாளர் (பாஸ்)” என்று கூறினார்.
இதையும் படிங்க : 3 மணி நேர பயணம்.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.. நாடு திரும்பினார் UAE அதிபர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com