Pakistani Ranger detained: ராஜஸ்தானில் பாகிஸ்தான் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Pakistani Ranger detained: ராஜஸ்தானில் பாகிஸ்தான் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: May 3, 2025 at 11:55 pm
ஜெய்ப்பூர், மே 3 2025: ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தானிய படைவீரர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கைது செய்யப்பட்டதாக சனிக்கிழமை (மே 3 2025) பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், 2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், தற்செயலாக எல்லையைக் கடந்ததற்காக ஒரு பி.எஸ்.எஃப் ஜவானை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்த சில நாள்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் ரேஞ்சரை ராஜஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) காவலில் எடுத்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.எனினும், கைது செய்யப்பட்ட ரேஞ்சரின் அடையாளத்தையோ அல்லது அவர் எப்படி பிடிபட்டார் என்பது தொடர்பான விவரங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.
பஹல்காம் தாக்குதல்களுக்கு மறுநாள் ஏப்ரல் 23 அன்று, பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் பூர்ணம் குமார் ஷா என்ற பிஎஸ்எஃப் ஜவான் பாகிஸ்தான் படைகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நேஷனல் ஹெலால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு நோட்டீஸ்.. அடுத்த விசாரணை எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com