Mohd Moquim : ஒடிசா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ முகம்மது மோக்கீம் காங்கிரஸ் கட்சியில் இருருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
Mohd Moquim : ஒடிசா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ முகம்மது மோக்கீம் காங்கிரஸ் கட்சியில் இருருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

Published on: January 28, 2026 at 12:36 am
Updated on: January 28, 2026 at 12:40 am
புதுடெல்லி, ஜன.28, 2026: ஒடிசா மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ முகம்மது மோக்கீம் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, 2022-இல் மோக்கீம் மீது விசிலன்ஸ் சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ரூ.1.5 கோடி கடனைப் பெற போலி மற்றும் புனையப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன.
இந்நிலையில், காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்துள்ளார். தொடர்ந்து, “மக்களின் நலனுக்காக, சுயமாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார். இது ஒடிசா அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் மாணவர்கள் போராட்டம்.. யூ.ஜி.சி விதிகளுக்கு எதிர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com