Nitish Kumar : மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு திரும்பி உள்ளார், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
Nitish Kumar : மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு திரும்பி உள்ளார், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

Published on: April 10, 2026 at 4:02 pm
புதுடெல்லி, ஏப். 10 2026: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய துணைக் குடியரசுத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான C. P. ராதாகிருஷ்ணன், நிதிஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் இதில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக, ராஜ்யசபா அவைத் தலைவர் J. P. நட்டா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், பீகார் துணை முதலமைச்சர் சம்ராட் சௌதரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றதன் மூலம், நாடாளுமன்ற மேலவை செயல்பாடுகளில் நிதிஷ் குமார் நேரடியாக பங்கேற்க உள்ளார். பீகார் மாநில அரசியலில் முக்கிய இடத்தை வகித்து வரும் அவர், கூட்டணி அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் வாய்ந்த தலைவராக கருதப்படுகிறார்.
இந்த நிகழ்வு, மத்திய அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. நிதிஷ் குமார் ராஜ்யசபாவில் தனது அனுபவத்தை பயன்படுத்தி மாநில நலன் தொடர்பான பிரச்சினைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கூட்டாட்சி தொடர்பான விவகாரங்களில் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நிதிஷ் குமாரின் அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : ஊடுருவல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.. பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com