Pahalgam terror attack: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Pahalgam terror attack: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Published on: June 22, 2025 at 1:09 pm
ஜம்மு, ஜூன் 22 2025: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தப் படுகொலை நிகழ்ந்து சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர்களுக்கு தங்குமிடம் மற்றும் தளவாட உதவிகளை வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22 2025) அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்த இருவரும் பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் எனவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 22 அன்று 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர்வாசி கொல்லப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளின் பெயர்களையும் அவர்கள் வெளியிட்டனர் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “பஹல்காமின் பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமின் ஹில் பார்க்கைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவர், தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் (LeT) தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என என்.ஐ.ஏ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட 9 இடங்களில் தாக்குதலில் நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 40க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர் எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பகல்காம் தாக்குதல்.. அமர்நாத் யாத்திரைக்கு இப்படி ஓர் சிக்கலா? உளவுத்துறை எச்சரிக்கை.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com