Navjot Kaur Sidhu: நவஜோத் சித்துவின் மனைவி நவஜோத் கௌர் சித்து காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நவஜோத் சித்து- காங்கிரஸ் தொடர்புகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
Navjot Kaur Sidhu: நவஜோத் சித்துவின் மனைவி நவஜோத் கௌர் சித்து காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நவஜோத் சித்து- காங்கிரஸ் தொடர்புகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

Published on: February 7, 2026 at 7:32 pm
புதுடெல்லி, பிப்.7, 2026: சித்துவின் அரசியல் பயணம், ராஹுல் ‘பாய்’ என்று அழைத்த நிலையிலிருந்து மீண்டும் ‘பப்பூ’ என்று விமர்சிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், நவஜோத் சிங் சித்துவின் அரசியல் நடவடிக்கைகள் இப்போது தீவிரமான திருப்பத்தைக் காட்டுகின்றன.
அவரது மனைவி டாக்டர் நவ்ஜோத் கவுர் காங்கிரஸ் அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நவ்ஜோத் கவுர் கட்சியின் உயர்மட்ட தேசியத் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளார்.
அதாவது அவரை பப்பூ என அழைத்துள்ளார். முன்னதாக, ராகுல் பாய் (சகோதரர்) எனக் கூறிய நிலையில், தற்போது பப்பூ என விமர்சித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர்
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி நவஜோத் சிங் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே அவர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் இல்லாவிட்டால் அவர் மாநில அரசியலுக்கு திரும்ப மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஞ்சாபில் ₹500 கோடி வைத்திருப்பவர்களால் மட்டுமே முதலமைச்சர் பதவியைப் பெற முடியும் என்று அவர் கூறியிருந்தார். அதுகுறித்து பேசிய கவுர், “நாங்கள் எப்போதும் பஞ்சாப் மற்றும் பஞ்சாபியத்துக்காகப் பேசுகிறோம்… ஆனால் முதல்வர் நாற்காலியில் அமர எங்களுக்கு ₹500 கோடி இல்லை,” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மும்பை பா.ஜ.க மேயர் வேட்பாளர்.. யார் இந்த ரிது தவ்டே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com