National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Published on: April 25, 2025 at 9:41 pm
புதுடெல்லி, ஏப்.25 2025: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) மறுத்துவிட்டது. மேலும், சிபிஐ சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அமலாக்க இயக்குநரகத்திடம் (ED) கூடுதல் ஆவணங்களை பதிவு செய்து குறைபாடுகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்காமல் வழக்குத் தொடரும் புகாரை (குற்றப்பத்திரிகை) விசாரிக்க முடியாது என்றும் கூறினார். இதற்கிடையில், சோனியா மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினர் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் அமலாக்கத் துறை வாதிட்டது. இதற்கு நீதிபதி, “நான் திருப்தி அடையும் வரை அத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : Delhi mayor: டெல்லி புதிய மேயர் தேர்வு; யார் இவர் தெரியுமா?
இந்த வழக்கு மே 2 ஆம் தேதி அடுத்த விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தனது தனிப்பட்ட புகாரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் காந்தி குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படும் யங் இந்தியன் ஆகியோர் மீது மோசடி, குற்றவியல் சதி, குற்றவியல் நம்பிக்கை மோசடி மற்றும் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கில் 2025 ஏப்ரல் 15 ஆம் தேதி சோனியா மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘பாகிஸ்தானியர்களை அடையாளம் காணுங்கள்’: மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா உத்தரவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com