Karnataka Online Gambling Suicide: கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka Online Gambling Suicide: கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: March 25, 2026 at 2:09 pm
Updated on: March 25, 2026 at 2:14 pm
பெங்களூரு, மார்ச் 25 2026: கர்நாடக மாநிலத்தில் உள்ள சிஞ்சோலி தாலுகா சாலகர் பகுதியை சேர்ந்த அனிஷ்கர் (வயது 21) மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். அனிஷ்கர் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட செயலிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட நிதி இழப்பால் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், அனிஷ்கர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூதாட்டத்தில் இழந்த பணத்தை ஈடு செய்ய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இருந்து பணம் கடன் பெற்றிருந்ததாகவும், தொடர்ந்து ஏற்பட்ட நிதியிழப்புகள் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவர் பயன்படுத்திய மொபைல் போன் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் குறித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.80 ஆயிரத்தை இழந்ததாலும், கடன் தொல்லையாலும் அனிஷ்கர் தற்கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் நிலையில், நிதி இழப்புகள் காரணமாக மன அழுத்தம் மற்றும் கடன் சுமை அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மதம் மாறினால் பட்டியல் இன அந்தஸ்து இழப்பு.. உச்ச நீதிமன்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com