Jaipur: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்.
Jaipur: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்.
Published on: June 29, 2025 at 12:59 pm
ஜெய்ப்பூர், ஜூன் 29 2025: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சித்திரகூட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், தனது இரு மைனர் மகள்களை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான செய்திகள் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே-யில் செய்தியாக வெளிவந்துள்ளன.
இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மைனர் பெண்களின் தாயார் முதலில் குடும்ப கௌரவம் கருதி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், மகள்களுக்கு உடல் நலன் பாதிக்கவே இது பற்றி மருத்துவரிடம் கூறினார்.
இந்த நிலையில், மருத்துவர்கள் காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்தியா டுடேயிடம் பேசிய சித்திரகூட் காவல் நிலைய அதிகாரி அன்டிம் சர்மா, “பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது தாயாருக்கும் ரகசிய ஆலோசனை வழங்கி, ரகசிய வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “தனது கணவர் மீதான பயம் மற்றும் சமூக களங்கம் காரணமாக தாய் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தயங்கினாலும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறிக்கை மற்றும் ஆலோசனை குற்றவாளி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உதவியது” என்றார்.
இதையும் படிங்க : 24 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; இமாச்சலப் பிரதேசத்தில் ஆசிரியர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com