Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
Published on: April 17, 2025 at 3:25 pm
கொல்கத்தா, ஏப்.17 2025: மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை (BJP) கடுமையாக தாக்கினார். அப்போது, அவர்கள் “முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்” என்றும் மேற்காசிய நாடுகளில் அவர்களின் விருந்தோம்பலைப் பெறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “நீங்க முஸ்லிம்களுக்கு எதிரானவங்க; ஆனா சவுதி அரேபியால முஸ்லிம்களை சந்திக்கிறீங்க.! நீங்க துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போனால், அங்க யாரோட விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வீங்க? உங்க நாட்டுல ஒண்ணு சொல்றீங்க.. வெளியில ஒண்ணு சொல்றீங்க” என்றார்.
மேலும், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக “ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்” என்று இந்திய கூட்டணிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து மம்தா பானர்ஜி, “நான் இந்திய கூட்டணிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்: நாம் ஒற்றுமையாக இருந்து தைரியமாக போராடுவோம். இது ஒரு தனிப்பட்ட விஷயம் அல்ல; இது அனைவரையும் பாதிக்கும். இன்று, இது உங்களுக்கு எதிராக நடக்கிறது. நாளை, அது வேறு ஒருவருக்கு எதிராக இருக்கும்” என்றார்.
முர்ஷிதாபாத் வன்முறை
2025 ஏப்ரல் 11ஆம் தேதியன்று வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது முர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்தது. இதன் விளைவாக தந்தை-மகன் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். மேலும் பரவலான சொத்து சேதமும் ஏற்பட்டது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முர்ஷிதாபாத் திட்டமிட்ட வகுப்புவாத கலவரம்.. வங்கதேசத்தினருக்கு தொடர்பா? மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com