மேற்கு வங்கத்தை 3 ஆக பிரிக்க பா.ஜ.க திட்டம்.. மம்தா பானர்ஜி

Assembly Election 2026 : மேற்கு வங்க மாநிலத்தை 3 ஆக பிரிக்க பாரதிய ஜனதா திட்டம் வைத்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: April 13, 2026 at 10:04 am

கொல்கத்தா, ஏப்.12, 2026: மேற்கு வங்காளத்தை 3 பகுதிகளாக பிரிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் சத்னா மற்றும் ஓண்டா மற்றும் பர்பா பர்தாமானில் உள்ள கந்தகோஷ் ஆகிய இடங்களில் தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், வங்காளத்தின் சில பகுதிகள் பிஹார் அல்லது ஒடிசாவுடன் இணைக்கப்படலாம் என்று கூறினார்.

மேற்கு வங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் வகையில் எல்லை நிர்ணய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சில பகுதிகளை பீகார் அல்லது ஒடிசாவுடன் இணைத்து, அங்குள்ள வங்காளிகளை சித்திரவதை செய்யலாம்,” என்று மம்தா கூறினார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்ற பாஜக 1,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், தேர்தலுக்காக நிறுத்தப்பட்ட மத்தியப் படைகள் தேடுதல்களின் போது பெண்களை “அவமரியாதை” செய்வதாக பானர்ஜி மேலும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: எங்களுக்கு ஜனநாயகன் தேவை.. பீகாரின் வருங்கால முதல்வரே.. பரபரக்கும் போஸ்டர்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com