Mallikarjun Kharge: ஏழைகளுக்கு எதிரான மோடி அரசாங்கம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Mallikarjun Kharge: ஏழைகளுக்கு எதிரான மோடி அரசாங்கம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Published on: April 17, 2025 at 4:14 pm
புதுடெல்லி, ஏப்.17 2024: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை (ஏப்.17 2025) “ஏழைகளுக்கு எதிரான” மோடி அரசாங்கம் என விமர்சித்தார்.
இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இந்தியில், “மக்கள் விரோத மோடி அரசாங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் (MGNREGA) ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட (MGNREGA) தொழிலாளர்களின் உரிமைகளைத் தாக்குவது போன்றது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :வக்ஃப் திருத்தச் சட்டம்; ‘நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்’.. மோடியை தாக்கிய மம்தா பானர்ஜி
மேலும், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை அடக்குமுறைப்படுத்த முனைகிறது என்றும் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும்; மேலும் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு குறைந்தது 150 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, ஊடக அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துக்கொண்டார். அதில், இரண்டு குழுக்களின் பரிந்துரைகள் இருந்தபோதிலும், வழக்கமான வருடாந்திர உயர்வுக்கு மேல் சாத்தியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (NREGS) கீழ் தினசரி அடிப்படை ஊதியத்தை அரசாங்கம் கணிசமாக உயர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்து வாரியங்களில் இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவார்களா? வக்ஃப் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com