Maharashtra Civic Polls 2026: மகாராஷ்ரா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Maharashtra Civic Polls 2026: மகாராஷ்ரா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Published on: January 16, 2026 at 10:41 am
மும்பை, ஜன.16, 2026: மகாராஷ்டிரா மாநிலத்தின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரஹன் மும்பை மாநகராட்சி (BMC) தேர்தலும் அடங்கும்.
செய்தி சுருக்கம்
⦁ வாக்கு எண்ணிக்கை காலை 10:00 மணிக்கு தொடங்குகிறது.
⦁ பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
⦁ மொத்தம் 15,931 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
⦁ BMC-யின் ஆண்டு பட்ஜெட் 74,400 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும்.
⦁ மும்பை மாநகராட்சி தேர்தலில் மட்டும் 1,700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
2022ல் சிவசேனா பிளவு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் மும்பை மாநகராட்சி தேர்தல். அப்போது, ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்.எல்.ஏக்களுடன் பிரிந்து, பாஜக உடன் கூட்டணி அமைத்து, தற்போது துணை முதல்வராக உள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிராவின் அரசியல் சூழ்நிலைக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் முன்னிலை உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: 2.9 டிகிரி செல்சியஸ் குளிரில் நடுங்கிய டெல்லி.. போக்குவரத்து பாதிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com