Mallikarjun kharge: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு விடை கொடுத்தார்; சபை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Mallikarjun kharge: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு விடை கொடுத்தார்; சபை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Published on: March 18, 2026 at 6:08 pm
Updated on: March 18, 2026 at 7:21 pm
புதுடெல்லி, மார்ச் 18, 2026: மாநிலங்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று (புதன்கிழமை) ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு விடை கொடுத்த அவர், சபையின் நடைமுறை மற்றும் தொழில்நடத்தை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கார்கே கோரிக்கைகள்
அப்போது மல்லிகார்ஜூன கார்கே, “மக்களின் முக்கிய பிரச்சினைகள் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சபை அதிக அமர்வுகள் நடத்த வேண்டும்” என்றார். மேலும், “சட்டங்களை உருவாக்கும் செயல்முறையில் எதிர்க்கட்சியினரின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கு தடையாக இருப்பது பாராளுமன்றத்தின் வலிமையை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “நடைமுறை மற்றும் தொழில்நடத்தை விதிகளை காலம்தோறும் மறுபரிசீலனை செய்வது அவசியம். இது தற்போது பொது நோக்கக் குழுவில் பரிசீலனையில் உள்ளது, அதற்கு தீவிரமான விவாதம் தேவை” என்றார்.
கார்கே ஓய்வு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ஓய்வு குறித்து பேசுகையில், “அரசியலில் ஈடுபட்டவர்கள் பொதுவாழ்க்கையில் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை; நாட்டிற்கு சேவை செய்வதில் அவர்களின் ஆர்வம் ஒருபோதும் குறையாது” என்றார்.
மேலும் கார்கே, “மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சகாக்களுக்கு உளமார்ந்த வரவேற்பு. ஓய்வு பெறும் உறுப்பினர்கள் பொதுவாழ்க்கையில் தொடர்ந்து அர்த்தமுள்ள பங்களிப்பை செய்வார்கள் என நம்புகிறேன். இங்கு பெற்ற அனுபவம், எதிர்காலத்தில் இன்னும் முக்கியமான பங்குகளை ஏற்க அவர்களை வலுப்படுத்தும்” என்றார்.
இதையும் படிங்க: தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் ராகுல் காந்தி.. கங்கனா ரணாவத்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com