பாலக்காட்டில் மார்க்சிஸ்ட், பாஜக ரகசிய கூட்டணி.. காங்கிரஸ்!

Kerala election 2026: பாலக்காட்டில் சிபிஎம்–பாஜக ‘ரகசிய புரிதல்’ தெளிவாக உள்ளது என்று கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: March 21, 2026 at 8:06 pm

திருவனந்தபுரம் மார்ச் 21, 2026; கேரள மாநிலம் பாலக்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாரதிய ஜனதாவும் ரகசிய கூட்டணியில் உள்ளன என காங்கிரஸ் கட்சியின் கே.சி வேணுகோபால் குற்றம் சாட்டினார்.

மேலும், காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், இப்படியான மறைமுக ஒப்பந்தங்கள் ஒரு தொகுதியில் மட்டுமல்ல; மேலும் ஒரு அல்லது இரண்டு இடங்களிலும் இதுபோன்ற புரிதல்கள் உள்ளன” எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக, நெடும்பசேரி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி வேணுகோபால், “பாலக்காட்டில் நடப்பது, சிபிஎம்–பாஜக திட்டத்தை பிரதிபலிக்கிறது. இது வரும் நாட்களில் மேலும் தெளிவாகும். இப்படியான மறைமுக ஒப்பந்தங்கள் ஒரு தொகுதியில் மட்டுமல்ல; மேலும் ஒரு அல்லது இரண்டு இடங்களிலும் இதுபோன்ற புரிதல்கள் உள்ளன” என்றார்.

பாலக்காட்டில் போட்டி

பாலக்காட்டில் காங்கிரஸ் தரப்பில் நகைச்சுவை நடிகர் ரமேஷ் பிஷாரோடி போட்டியிடுகிறார். பாஜக தரப்பில் மூத்த தலைவரான ஷோபா சுரேந்திரன் நம்பிக்கையுடன் நிறுத்தப்பட்டுள்ளார். சிபிஎம் வேட்பாளர் ஹோட்டல் தொழிலதிபர் என். எம். ஆர். ரசாக் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சிக்கல்.. மார்ச் 23 வேட்பு மனு நிறைவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com