புதுடெல்லி, ஏப்.1, 2026: உலகின் மிகப்பெரியதும், முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 இன்று தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பு, பாரம்பரிய காகிதப் பதிவுகளை தவிர்த்து, முழுவதும் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெறுவதால், இந்தியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயமாகும்.
இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 இன்று முதல் கட்டமாக தொடங்கியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். மேலும், இது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடரில் 16வது கணக்கெடுப்பு ஆகும். அதேநேரம், சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
எப்படி நடைபெறும்?
இது இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதாவது, வீட்டு பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
டிஜிட்டல் கணக்கெடுப்பு
மேலும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. அந்த வகையில், வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு ஏப்ரல் 16 முதல் மே 15 வரை நடைபெறும். சுய-பதிவு வசதி இன்று முதல் 15ம் தேதி வரை திறந்திருக்கும்.
இது மட்டுமின்றி இது சாதி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆகும் மொத்த செலவு ரூ.11,718 கோடி ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால், பாதுகாப்பான இணைய தளத்தின் மூலம், குடிமக்கள் தங்கள் விவரங்களை 16 மொழிகளில் நேரடியாக பதிவு செய்யலாம். பின்னர் வீடு-வீடாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதற்கிடையில், இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்ஜய் குமார் நாராயண் தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளார். மேலும், குடிமக்கள் துல்லியமான, சரியான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பா.ஜ.க.வில் லியாண்டர் பயஸ்.. மேற்கு வங்கத்தில் போட்டி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்