இந்தியா-பாகிஸ்தான் துருப்புகள் துப்பாக்கிச் சூடு.. எல்லையில் பதற்றம்!

Jammu Kashmir: இந்திய – பாகிஸ்தான் படைகள் கேரன் பிராந்தியத்தில் சர்வதேச எல்லைக்கோடு பகுதி (LoC) அருகே துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன. இந்த சம்பவம் ஜனவரி 20-21 இரவு நடந்தது.

Published on: January 21, 2026 at 5:48 pm

Updated on: January 21, 2026 at 5:54 pm

ஜம்மு, ஜன.21, 2026: இந்திய – பாகிஸ்தான் படைகள், ஜம்மு காஷ்மீரின் கேரன் பிராந்தியத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே (LoC) அருகே துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன. இந்த சம்பவம் ஜனவரி 20-21 இரவு நடந்தது. ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையினர் 6 பேர், கேரன் பாலா பகுதியில் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்களை நிறுவிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் படைகள் சிறிய ஆயுதங்களால் இரண்டு சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து, இந்திய படைகள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சுட்டுடன் துப்பாக்கியால் சுட்டு பதிலளித்தனர். இரு தரப்பிலும் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கேரன் பிராந்தியம் வட காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் சிறிய ஆயுதங்களால் இரண்டு சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மேலும், இத்தகைய சண்டைகள் பெரும்பாலும் குறுகிய காலம் நீடிக்கும். எனினும், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தோனேசியா பேட்மிண்டன் போட்டிகள்.. இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல் காங்கிரஸ்!
Rahul Gandhi

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com