Arunachal Pradesh: அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவதை இந்தியா நிராகரத்துள்ளது.
Arunachal Pradesh: அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவதை இந்தியா நிராகரத்துள்ளது.
Published on: May 14, 2025 at 12:07 pm
புதுடெல்லி, மே 14 2025: அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை மாற்றுவதற்கான சீனாவின் சமீபத்திய நடவடிக்கையை இந்திய அரசாங்கம் புதன்கிழமை (மே 14 2025) உறுதியாக நிராகரித்தது.
இது தொடர்பாக இந்திய செய்தித் தொடர்பாளர், “இது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான பயனற்ற மற்றும் ஆதாரமற்ற முயற்சி என்று கூறினார்.
மேலும், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் கவனித்துள்ளோம்.
எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்” என்றார். திபெத்தின் தெற்குப் பகுதியில் அருணாச்சலப் பிரதேசம் அமைந்துள்ளது. இங்குள்ள சில பகுதிகளுக்கு சீனா பெயரிட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாதி இறுதிச் சடங்கில் அரசு, இராணுவ அதிகாரிகள்.. யார் யார் பங்கேற்பு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com