சீனாவின் புதிய இந்தியத் தூதர்.. யார் இந்த விக்ரம் துரைசாமி?

Vikram Doraiswami: சீனாவுக்கான அடுத்த தூதராக விக்ரம் கே. துரைசாமியை இந்தியா நியமித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

Published on: March 19, 2026 at 1:25 pm

Updated on: March 19, 2026 at 2:07 pm

புதுடெல்லி, மார்ச் 19 2026: சீனாவுக்கான அடுத்த தூதராக விக்ரம் கே. துரைசாமியை இந்தியா நியமித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வியாழக்கிழமை (மார்ச் 19, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஐக்கிய ராஜ்ஜியத்திற்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றி வரும் துரைசாமி தற்போது சீனாவுக்கான முக்கியமான தூதரக பொறுப்பை ஏற்கிறார். கிழக்கு லடாக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த எல்லைப் பதற்றத்தைத் தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இரு தரப்பு முயற்சிகளுக்கும் மத்தியில், புதிய தூதரின் பங்கு முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சீனாவில் இந்திய தூதராக உள்ள பிரதீப் குமார் ராவத்துக்கு பதிலாக விக்ரம் கே. துரைசாமி பொறுப்பேற்கிறார்.

யார் இந்த துரைசாமி?

துரைசாமி ஒரு தமிழ் ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு இந்திய விமானப்படை அதிகாரி. துரைசாமி, டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகத்தில் சீன மொழியில் பயிற்சியும் பெற்றுள்ளார். அவர் சீன, பிரெஞ்சு மற்றும் கொரிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.

1992-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு துறையில் சேர்ந்த விக்ரம் கே. துரைசாமி, விரிவான தூதரக அனுபவம் கொண்டவர். 1990களின் இறுதியில் சுமார் நான்கு ஆண்டுகள் பெய்ஜிங் நகரில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது. மேலும், ஹாங்காங், நியூயார்க் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தூதரகங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும், தென்னாப்பிரிக்காவில் இந்தியத் தூதரகத்தின் பொதுத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

லண்டனில் பதவி ஏற்கும் முன், துரைசாமி, வங்கதேசத் நாட்டில் இந்திய உயர் ஆணையராக பணியாற்றினார். மேலும், பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் தனிப்பட்ட செயலாளராகவும், வெளியுறவு அமைச்சகத்தில் SAARC மற்றும் இந்தோ-பசிபிக் பிரிவுகளை தலைமை தாங்கிய அனுபவமும் அவருக்கு உள்ளது.

அதுடன், உஸ்பெகிஸ்தான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இந்திய தூதராகவும் பணியாற்றியுள்ளார். 2012-ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற BRICS 2012 உச்சிமாநாட்டை ஒருங்கிணைப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். 2019-இல் சர்வதேச அமைப்புகள் மற்றும் உச்சி மாநாடுகளுக்கான கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பிய மத்திய அரசு

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பிய மத்திய அரசு Iran Israel War

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பிய மத்திய அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com