Pahalgam terror attack Hindu professor survived: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது.
Pahalgam terror attack Hindu professor survived: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது.
Published on: April 24, 2025 at 10:23 am
புதுடெல்லி, ஏப். 24. 2025: சில்சாரில் உள்ள அஸ்ஸாம் பல்கலைக்கழகத்தில் பெங்காலி துறையின் தலைவராக இருப்பவர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி. இவர் தனது குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சென்றிருந்தார்.
இந்த நிலையில், 2025 ஏப்.22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி அருகில் உள்ள மரத்தின் பின்னால் சென்று ஒளிந்துள்ளார்.
அப்போது, அவர் அருகில் பயங்கரவாதி ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில், அங்கிருந்த உள்ளூர் இஸ்லாமிய மக்கள், “லா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என மந்திரத்தை ஓதியுள்ளனர்.
இதையத்து பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜியும் மந்திரத்தை முனுமுனுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த பயங்கரவாதி மந்திரத்தை சப்தமாக ஓதச் சொல்லியுள்ளான்.
இவர் சப்தமாக ஒதும் நேரத்தில் அங்கிருந்த உள்ளூர் மக்களும் சப்தமாக மந்திரத்தை ஓத பயங்கரவாதி அங்கிருந்து நகர்ந்து விட்டான். இந்த நிலையில், பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி உயிர் பிழைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரர் பஹல்காம் பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி குடும்பத்துக்கு நீண்டநாள் ஆசையாக இருந்துள்ளது. இதனையும், தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி விவரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘இஸ்லாமியர் என அழைக்க தகுதியற்றவர்கள் நீங்கள்’: அஜ்மீர் தர்கா தலைவர் கருத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com