Essential commodities act: சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
Essential commodities act: சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

Published on: March 10, 2026 at 3:12 pm
புதுடெல்லி, மார்ச் 10, 2026: ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டு பயன்பாடு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் சமையல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 24 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மேலும் சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
உணவகங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சென்னை ஹோட்டல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உணவுகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனையை சமாளிக்க அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர்.. ராஜினாமா யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com