DIG Om Prakas Death Case: பெங்களூருவில் முன்னாள் கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
DIG Om Prakas Death Case: பெங்களூருவில் முன்னாள் கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on: April 21, 2025 at 5:58 pm
பெங்களூரு, ஏப். 21 2025: பெங்களூருவில் முன்னாள் கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஞாயிறு(ஏப்.20) மாலை மரணமடைந்துள்ளார். ஹெச்எஸ்ஆர் லேயவுட் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சடலமாக கிடந்தார்.
இந்த கொலை சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ள நிலையில், அவரது மனைவி பல்லவி காவல் கட்டுப்பாட்டு மையமான 112-க்கு தொடர்புகொண்டு “நான்தான் கொலை செய்தேன்” என ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டிஜிபி ஓம் பிரகாஷின் மகளான கிரிதி மற்றும் மனைவி பல்லவி இருவரும் காவலில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது அவரின் மகன் கார்த்திகேஷ் வீட்டில் இல்லாததாகவும், அவர் வீடு திரும்யிய போது தந்தை தரையில் இரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்ததை கண்டதாகவும் எஃப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தனது தாயார் தனது தந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், இதன் காரணமாக ஓம் பிரகாஷ் தற்காலிகமாக தங்கை சரிதா குமாரியின் வீட்டில் தங்கி வந்ததாகவும் கார்த்திகேஷ் தெரிவித்துள்ளார். கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிரிதி அவரது தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணையில், பல்லவி ஓம் பிரகாஷ் முகத்தில் மிளகாய்த் தூள் வீசி, பின்னர் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது தோழிக்கு வீடியோகால் செய்து “நான் அந்த ராட்சஸனை கொன்றுவிட்டேன்” என கூறியதும் உள்ளது.
முன்னதாக, ஓம் பிரகாஷ் மற்றும் பல்லவி இடையே நில விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதாகவும், டாண்டேலி பகுதியில் நிலம் தொடர்பான தகராறு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவி.ஐ.பி பாதுகாப்புப் பொறுப்பாளரான ஸ்ரீனிவாஸ், “இது மிகவும் கொடூரமான கொலை. அவர் இறப்பதற்கு முன்பே கொடூரமாக குத்தப்பட்டுள்ளார். மனதளவில் அவருக்கு நெருக்கடி இருந்துள்ளது. அவர் மனைவிக்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்ததாகவும், யாரையும் வீட்டில் அனுமதிக்கவில்லை எனவும்” கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க கர்நாடகா முன்னாள் டி.ஐ.ஜி மர்ம மரணம்; போலீஸ் விசாரணை.. பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com