முன்னாள் முதலமைச்சரின் 19 வயது பேரன் மர்ம மரணம்.. மணாலியில் உச்சக்கட்ட பரபரப்பு!

EX CM grandson found dead : முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் அவர்களின் பேரன், நண்பர்களுடன் விடுமுறைக்காக மனாலி சென்றபோது, அங்குள்ள ஓட்டலில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

Published on: February 25, 2026 at 5:20 pm

Updated on: February 25, 2026 at 5:21 pm

ராஞ்சி, பிப்.25, 2026: ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சாம்பாய் சோரன் அவர்களின் பேரனும், பாபுலால் சோரன் அவர்களின் மகன் வீர்சோரன், தனது நண்பர்களுடன் மனாலியில் விடுமுறைக்குச் சென்றபோது, மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை (பிப்.24, 2026) உயிரிழந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19 வயதான வீர்சோரன் மாநிலத்திற்கு வெளியே கல்வி கற்றுவந்தார். பிப்ரவரி 22 அன்று அவர் தனது நண்பர்களுடன் விடுமுறைக்குச் சென்றார். அவர்கள் சிம்சா பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், பிப்ரவரி 23 அன்று அவர்கள் சோலாங் பள்ளத்தாக்கு மற்றும் ஹம்டா பாஸ் அருகே உள்ள சேத்தன் கிராமத்திற்குச் சென்றனர். அந்த மாலை ஓட்டலுக்கு திரும்பியபின், வீர் சோரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வெளியான அறிக்கையில், “செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 12.30 மணிக்கு, பயணத்திலிருந்து திரும்பியபின், வீர் சோரனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது.
அவரது நண்பர்கள் அவருக்கு மருந்து கொடுத்தனர், பின்னர் அவர் ஓய்வெடுக்கத் தூங்கினார். இந்நிலையில், மதியம் 2.30 மணியளவில், அறையில் பெரிய சத்தம் கேட்கப்பட்டது. நண்பர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் படுக்கையில் இருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரத்தில் ஓட்டலில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. நிலைமை தீவிரமாகியதும், அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மனாலி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும்- சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல்.. என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு?

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு! T20 World Cup

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com