திருவனந்தபுரம்: வீட்டில் பிணமாக கிடந்த பெண் மருத்துவர்; கழுத்து மற்றும் மணிக்கட்டு அறுப்பு!

Female dentist Soumya found dead: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல் மருத்துவர் செளமியா மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: March 15, 2025 at 4:44 pm

Updated on: March 15, 2025 at 4:58 pm

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 31 வயதான பெண் மருத்துவர் சௌமியா என்பவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள செங்கல் கொட்டமம் என்ற பகுதியில் தனது கணவர் ஆதர்ஷ் உடன் வசித்து வந்தவர் சௌமியா.

பல் மருத்துவரான சௌமியாவுக்கும் ஆதர்சுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. எனினும் இந்த ஜோடிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் சௌமியா மார்ச் 13ஆம் தேதி வழக்கம்போல் கணவருடன் படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.

இதற்கிடையில் கட்டிலில் மனைவியை தேடிய ஆதர்சுக்கு அவர் இல்லாதது அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் பதறிப் போன ஆதர்ஷ் மனைவி எங்கே என வீடு முழுக்க தேடி உள்ளார். அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மற்றொரு அறையில், சௌமியா ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதர்ஷ் உடனடியாக அவரை மீட்டு நெய்யாற்றின் கரை நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

பல் மருத்துவரான சௌமியா தனது கழுத்து மற்றும் மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தை இல்லாத ஏக்கம் மற்றும் சரியான வேலையின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவை சௌமியாவின் மரணத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பாரசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் சௌமியாவின் மரணம் கேரளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க பஞ்சாப்பில் சிவசேனா பிரமுகர் சுட்டுக் கொலை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

சர்ச் சென்ற ஆசிரியை.. கண்ணிமைக்கும் நேரத்தில் செயின் பறித்த திருடன்.. திசையன்விளையில் பரபரப்பு!
Man arrested for snatching chain

சர்ச் சென்ற ஆசிரியை.. கண்ணிமைக்கும் நேரத்தில் செயின் பறித்த திருடன்.. திசையன்விளையில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com