Jammu and Kashmir: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
Jammu and Kashmir: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
Published on: April 19, 2025 at 2:22 pm
புதுடெல்லி, ஏப்.19 2025: ஆப்கானிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை (ஏப்.19 2025) மதியம் 12:17 மணிக்கு (IST) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினார்கள். இது தொடர்பான காட்சிகளை பிரபல செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்
இதற்கிடையில், பாகிஸ்தானிலும் சனிக்கிழமை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வகையில், ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.
தேசிய நில அதிர்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் 94 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, இதன் மையம் ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பஞ்சாபின் பிற மாவட்டங்கள், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
முன்னதாக ஏப்ரல் 12 ஆம் தேதி, பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் மையம் ராவல்பிண்டியில் இருந்து வடமேற்கே 60 கி.மீ தொலைவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்: வரி விதிப்பில் மாற்றம் வருமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com