Congress MP Shashi Tharoor: நாட்டின் துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு காங்கிரஸின் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பதிலளித்தார்.
Congress MP Shashi Tharoor: நாட்டின் துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு காங்கிரஸின் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பதிலளித்தார்.
Published on: August 3, 2025 at 3:28 pm
புதுடெல்லி, ஆக.3 2025: இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் மூத்தத் தலைவருமான சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.3 2025), துணை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு கிட்டத்தட்ட தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும், அது ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “ஆளும் கட்சி யாரையாவது நியமிப்பார் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும், ஏனெனில் வாக்காளர்களின் அமைப்பும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும்” என்றார்.
தொடர்ந்து, “எதிர்க்கட்சிகளையும் அவர்கள் கலந்தாலோசிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் யாருக்குத் தெரியும்?” என்றும் அவர் தெரிவித்தார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளது.
ஏனெனில் இந்தத் தேர்தல் ஒரு தீவிரமான போட்டியாக இருக்கும். மேலும், இந்தத் தேவைப்பட்டால், செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள அறை எண் F-101, வசுதாவில் வாக்குப்பதிவு நடைபெறும்.
தொடர்ந்து, “வாக்குப்பதிவு நடைபெறும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்“ எனபதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com