MP Shashi Tharoor praises PM Modi: பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் இந்தியர்களின் சொத்து ஆக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
MP Shashi Tharoor praises PM Modi: பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் இந்தியர்களின் சொத்து ஆக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Published on: June 23, 2025 at 1:10 pm
புதுடெல்லி, ஜூன் 23 2025: உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களின் சொத்து ஆக திகழ்கிறார் என காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில நாளேடுக்கு அவர் எழுதிய கட்டுரையில் இதனை தெரிவித்தார். அதில், “பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாகவே உள்ளன, ஆனால் அதற்கு அதிக ஆதரவு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
மேலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து சசி தரூர், “இந்தியா ஒன்றுபட்டால், சர்வதேச தளங்களில் தெளிவுடனும் உறுதியுடனும் தனது குரலை வெளிப்படுத்த முடியும் என்பதை இது உறுதிப்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “’ஆபரேஷன் சிந்தூர்’-ஐத் தொடர்ந்து ராஜதந்திர ரீதியான தொடர்பு தேசிய உறுதிப்பாடு மற்றும் பயனுள்ள தகவல்தொடர்புக்கான ஒரு தருணமாக அமைந்தது” எனவும் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய குழுவில் சசி தரூர்
பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய எம்.பி.க்கள் குழு வெளிநாடுகளுக்கு பயணம் செய்தன.
இதில் அரேபிய நாடுகளுக்கு சென்ற குழுவில் சசி தரூர் மற்றும் ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; இங்கெல்லாம் மஞ்சள் அலெர்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com