Rahul Gandhi: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மூன்றாம் இடத்தில் இருக்கை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
Rahul Gandhi: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மூன்றாம் இடத்தில் இருக்கை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

Published on: January 26, 2026 at 11:27 pm
புதுடெல்லி, ஜன.26, 2026: குடியரசு தின அணிவகுப்பில், மாநிலங்களவை (ராஜ்யசபா) எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டனர்.
ஆனால், அவர்களுக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஆயுதமாக மாறியுள்ளது. இது நெறிமுறைக்கு எதிரானது எனக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு இவ்வாறு நடத்துவது எந்த மரியாதைக்கும், பாரம்பரியத்திற்கும், நெறிமுறைக்கும் ஏற்புடையதா? எனக் கேட்டுள்ளார்.
மேலும், “இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட அரசின் விரக்தியையே வெளிப்படுத்துகிறது,” என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய குடியரசுத் தின நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது வரிசை இருக்கை குறித்து காங்கிரஸ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமலாக்கத் துறை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை.. டெல்லி நீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com