Chhattisgarh: சத்தீஸ்கரில் உள்ள என்.சி.சி முகாமில் மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக 7 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Chhattisgarh: சத்தீஸ்கரில் உள்ள என்.சி.சி முகாமில் மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக 7 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: April 27, 2025 at 12:42 pm
ராய்ப்பூர், ஏப்.27 2025: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்த என்.சி.சி முகாமின் போது குரு காசிதாஸ் மத்திய பல்கலைக்கழக மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஏழு ஆசிரியர்கள் உட்பட எட்டு பேர் மீது சனிக்கிழமை (ஏப்.26 2025) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நமாஸ் செய்ய வற்புறுத்தியதாக புகார்
இதனை போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவம், கோட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷிவ்தராய் கிராமத்தில் நடந்துள்ளது. அதாவது, 2025 மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற்ற முகாமின் போது 159 மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தினர் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நான்கு இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில், அனைவரையும் கட்டாயப்படுத்தினர் எனக் கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
ஆசிரியர்கள் யார் யார்?
இதையடுத்து, குரு காசிதாஸ் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களான திலீப் ஜா, மதுலிகா சிங், ஜோதி வர்மா, நீரஜ் குமாரி, பிரசாந்த் வைஷ்ணவ், சூர்யபன் சிங் மற்றும் பசந்த் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 196 (b), 197 (1) (b) (c), 299, 302, 190 மற்றும் சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டத்தின் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குஜராத்தில் 1,000 வங்கதேசத்தினர் கைது; போலீஸ் அதிரடி வேட்டை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com