Thiruvananthapuram airport: திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Thiruvananthapuram airport: திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: April 27, 2025 at 4:22 pm
திருவனந்தபுரம், ஏப்.27 2025: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27 2025) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பாதுகாப்புக்காக அங்கு வரவழைக்கப்பட்டனர். மேலும், விமான நிலையத்தின் அனைத்து முனையங்களிலும் முழுமையான சோதனைகள் நடைபெற்றன.
இதனை உறுதிப்படுத்தி விமான நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கேரள மாநில தலைநகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டன.
இது நடந்த 24 மணி நேரத்துக்கு பின்னர், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் மின்னஞ்சல்களைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுகள் மற்றும் மோப்ப நாய் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.
இருப்பினும், எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் அந்த மிரட்டல்கள் புரளி என்பதை உறுதிப்படுத்தினர். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க : 15வது வேலை வாய்ப்பு மேளா; 51 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதம் வழங்கிய பிரதமர் மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com