Kerala Election 2026: “கேரளாவில் குறைந்தது நான்கு இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
Kerala Election 2026: “கேரளாவில் குறைந்தது நான்கு இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

Published on: April 13, 2026 at 12:32 pm
திருவனந்தபுரம், ஏப்.13, 2026: கேரளத்தில் குறைந்தப்பட்சம் 4 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெறும் என அக்கட்சி உறுதியாக நம்புகிறது.
கேரள மாநில சட்டப்பேரவையில் இம்முறை பா.ஜ.க சில சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக திருச்சூரில் வாக்காளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், பாலக்காட்டில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையில், இவை எதுவும் எங்களை பாதிக்காது. நாங்கள் குறைந்தப்பட்சம் 4 தொகுதிகளிலாவது வெற்றிப் பெறுவோம் என பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், காசர்கோடு, அட்டிங்கல், வட்டியூர்காவு, கட்டக்கடை, மணலூர் ஆகிய இடங்களில் அக்கட்சி நடத்திய போராட்டத்தை கருத்தில் கொண்டு சுமார் 10 இடங்களை கைப்பற்றும் என்ற பேச்சும் கூட உள்ளது. இருப்பினும், வட்டியூர்காவும், ஆரன்முலாவும் உருவான விதம், விஷயங்களை கணிக்க முடியாததாக உள்ளது என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பா.ஜ.க.வின் வெற்றிக்கு நம்பிக்கைகுரிய பட்டியதில் திருவனந்தபுரம் நேமம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன.
இதையும் படிங்க: எங்களுக்கு ஜனநாயகன் தேவை.. பீகாரின் வருங்கால முதல்வரே.. பரபரக்கும் போஸ்டர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com