Asaduddin Owaisi: பாகிஸ்தானுக்கு பதிலளிக்க வேண்டிய நேரமிது; இந்திய அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
Asaduddin Owaisi: பாகிஸ்தானுக்கு பதிலளிக்க வேண்டிய நேரமிது; இந்திய அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
Published on: May 4, 2025 at 7:16 pm
பாட்னா, மே 4 2025: அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் பொதுக்கூட்டம் பீகார் மாநிலம் கிழக்கு சம்பரானில் உள்ள டாக்டா என்ற பகுதியில் நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பாகிஸ்தானுக்கு பதிலளிக்க வேண்டிய நேரமிது; இந்திய அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பாகிஸ்தான் நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து மக்களைக் கொல்கிறார்கள் என்பதை பாகிஸ்தான் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது” என்றார். தொடர்ந்து, “பாகிஸ்தானுடன் நியாயப்படுத்துவதற்கான நேரம் இப்போது இல்லை. அது எப்போதோ முடிந்துவிட்டது. நாம் தற்போது உணர்ச்சிகளை இடையில் கொண்டு வராமல் இருக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு உரிய பதில்
மாறாக பாகிஸ்தானுக்கு உரிய பதில் அளிக்க வேண்டிய நேரம் இது. இதனை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன். சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல.
ஏனெனில், அவர்கள் ஒவ்வொரு 2-6 மாதங்களுக்கும் வந்து ராணுவம், சிஆர்பிஎஃப் வீரர்கள் அல்லது அப்பாவி காஷ்மீரிகளை குறிவைக்கிறார்கள்” என்றார்.
#WATCH | Dhaka, East Champaran (Bihar): AIMIM chief Asaduddin Owaisi says, "…Pakistan will never admit that terrorists from their country are coming to India and killing people. The time to reason with Pakistan has now ended. I say this with great responsibility, without… pic.twitter.com/QgULRn0z4z
— ANI (@ANI) May 4, 2025
மேலும், “பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி துணை நிற்கும்” என்றார். ஜம்மு காஷ்மீரின் பஹவ்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மேலும் சிக்கலாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய இரகசியங்கள் பரிமாற்றம்: பஞ்சாப்பில் இருவர் கைது.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com