IndiGo flight emergency landing: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது.
IndiGo flight emergency landing: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது.

Published on: January 18, 2026 at 6:53 pm
புதுடெல்லி ஜனவரி 18, 2026; டெல்லி-யில் இருந்து பக்டோக்ரா நோக்கி புறப்பட்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் குண்டு மிரட்டல் தகவல் வந்தது. இதனால், விமானம் உடனடியாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பிற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், அவசர தரையிறக்கத்துக்குக் காரணமான குண்டு மிரட்டல், விமானத்தின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட கைஎழுத்து குறிப்பு மூலம் வெளியிடப்பட்டது என்று உதவி காவல் ஆணையர் (ACP) ராஜ்நீஷ் வர்மா தெரிவித்தார்.
குண்டு மிரட்டல் – லக்னோவில் அவசர தரையிறக்கம்
இது குறித்து அவர், டெல்லியில் இருந்து பக்டோக்ரா நோக்கி புறப்பட்டிருந்த இந்திகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், கழிப்பறையில் டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்ட கைஎழுத்து குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதில், விமானத்தில் குண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விமானத்தில் மொத்தம் 238 பயணிகள், பைலட்டுகள் மற்றும் குழுவினரும் பயணம் செய்தனர்.
குண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும், விமானம் உடனடியாக லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது, விமானம் முழுமையாக தேடுதல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று உதவி காவல் ஆணையர் (ACP) ராஜ்நீஷ் வர்மா ANI செய்தி நிறுவனம் மூலம் தெரிவித்தார்.
இதையும் படிங்க; மலப்புரத்தில் 14 வயது சிறுமி வன்புணர்வு.. 16 வயதான சிறுவன் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com