Amritsar: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ‘முக்கியமான ராணுவ தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக’ 2 பேரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Amritsar: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ‘முக்கியமான ராணுவ தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக’ 2 பேரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on: May 4, 2025 at 6:45 pm
அமிர்தசரஸ், மே 4 2025: உளவு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பஞ்சாபின் அமிர்தசரஸ் காவல்துறை சனிக்கிழமை (மே 3 2025) இரண்டு பேரை கைது செய்தது. இவர்கள் மீது இராணுவ கன்டோன்மென்ட் பகுதிகள் மற்றும் விமானப்படை தளங்களின் முக்கியமான விவரங்கள் மற்றும் படங்களைப் பாகிஸ்தானுக்கு பகிர்ந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்கள் அதிகரித்த நிலையில் இந்தக் கைதுகள் நடந்துள்ளன. இதனை அமிர்தசரஸ் கிராமப்புற காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். மேலும், இவர்கள் பெயர் பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
அமிர்தசரஸில் இருவர் கைது
தொடர்ந்து, அமிர்தசரஸ் மத்திய சிறையில் காவலில் உள்ள ஹர்ப்ரீத் சிங் என்கிற பிட்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
#WATCH | Amritsar Rural Police arrested two person-Palak Sher Masih and Suraj Masih for their alleged role in leaking sensitive information and photographs of Army Cantonment areas and Air Bases in Amritsar. Preliminary investigation reveals their links to Pakistani intelligence… https://t.co/vrGnVkICRJ pic.twitter.com/7itw8Fk3uX
— ANI (@ANI) May 4, 2025
மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமுற்றனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராஜஸ்தானில் பாகிஸ்தான் படைவீரர் கைது; பரபரப்பு தகவல்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com