Noida techie death: நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஓட்டி வந்த கார் வாய்க்காலில் சிக்கி உள்ளது.
Noida techie death: நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஓட்டி வந்த கார் வாய்க்காலில் சிக்கி உள்ளது.

Published on: January 19, 2026 at 2:12 pm
நொய்டா ஜனவரி 19, 2026; உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா, செக்டர் 150 பகுதியில் நடந்த துயரமான விபத்தில், 27 வயது மென்பொருள் பொறியாளர் உயிரிழந்தார்.
அவர் ஓட்டிச் சென்ற கார், சாலையோர வடிகாலின் சுவர் உடைந்து, கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் தண்ணீர் நிரம்பிய அடித்தளத்தில் விழுந்தது. இதனால், அவர் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுவ்ராஜ் மேத்தா உயிரிழப்பு
நள்ளிரவு நேரத்தில், போலீசார் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறை குழுக்களை அழைத்தனர். பல மணி நேர தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, அந்த குழுக்கள் பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்டனர். அவர் யுவ்ராஜ் மேத்தா என அடையாளம் காணப்பட்டார்.
இந்த விபத்து குறித்து போலீசார் தெரிவிக்கையில், “யுவ்ராஜ் மேத்தா தனது தந்தையுடன் செக்டர் 150-இல் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தார். அவர் குருகிராம்-இல் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். விபத்து நள்ளிரவு நேரத்தில் நடந்ததும், யுவ்ராஜ் தனது தந்தைக்கு உடனடியாக தொலைபேசியில் அழைத்தார். ஆனால், அவரது தந்தை சம்பவ இடத்துக்கு வந்தபோதும், உதவி நேரத்தில் கிடைக்காததால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்பட்டது” என்றனர்.
தந்தை பேட்டி
பாதிக்கப்பட்டவரின் தந்தை ராஜ்குமார் மேத்தா, “என் மகன் சிக்கியபோது, அவன் எனக்கே நேரடியாக அழைத்தான். அவன் சொன்னது – ‘பாப்பா, நான் சிக்கி விட்டேன், கார் வடிகாலில் விழுந்துவிட்டது” என்றார் என கூறினார்.
இதையும் படிங்க; கேரளாவில் அரசியல் பரபரப்பு.. பாஜகவில் இணைந்த மார்க்சிஸ்ட் மாஜி எம்.எல்.ஏ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com