Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பயங்கரவாதிகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பயங்கரவாதிகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 24, 2025 at 10:27 am
புதுடெல்லி, ஏப்.24 2025: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் உட்பட 5 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் 2 பேர் உள்ளூர் போராளிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, அந்த மூன்று பயங்கரவாதிகள் பேசிய உருது மொழி பாகிஸ்தானை சார்ந்துள்ளது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அதிகாரிகள் 3 பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், “மற்ற இருவரும் குல்காமின் பிஜ்பெஹாரா மற்றும் தோகர்போராவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் 2017 இல் பாகிஸ்தானுக்குச் சென்று பயங்கரவாத பயிற்சி பெற்று காஷ்மீர் திரும்பியுள்ளனர்.
மேலும், அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் இந்தத் தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் இணைந்து நடத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு உள்ளூர்வாசி உள்பட 26 சுறறுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பஹல்காம் தாக்குதல் உள்ளூர் உளவுத்துறையின் தோல்வி: ப.சிதம்பரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com