Building collapses in Delhi: டெல்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்னர். வீடு இடிந்து விழுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Building collapses in Delhi: டெல்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்னர். வீடு இடிந்து விழுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Published on: April 19, 2025 at 9:34 am
Updated on: April 19, 2025 at 9:48 am
புதுடெல்லி, ஏப்.19 2025: டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் டெல்லி காவல்துறையின் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கட்டட விபத்து குறித்து சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில், வீடு இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றுவதில் உள்ளூர்வாசிகள் மீட்புக் குழுக்களுக்கு உதவுவதைக் காண முடிந்தது.
சனிக்கிழமை (ஏப்.19 2025) அதிகாலை 2:50 மணியளவில் வீடு இடிந்து விழுந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அத்வால் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், “அதிகாலை 2:50 மணியளவில் வீடு இடிந்து விழுந்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது.
Delhi: CCTV footage captured the sudden collapse of a four-storey L-shaped building pic.twitter.com/VaU6X7rpqy
— IANS (@ians_india) April 19, 2025
நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது முழு கட்டிடமும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் அறிந்தோம். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் டெல்லி தீயணைப்புப் படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
வெள்ளிக்கிழமை இரவு டெல்லியின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : 60 வயதில் மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திருமணம்: யார் இந்த ரிங்கு மஜும்தார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com