Delhi Indira Gandhi Airport: ஏப்ரல் 28 அன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 200 விமானங்கள் தாமதமாகின. என்ன காரணம்?
Delhi Indira Gandhi Airport: ஏப்ரல் 28 அன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 200 விமானங்கள் தாமதமாகின. என்ன காரணம்?
Published on: April 30, 2025 at 7:06 pm
புதுடெல்லி, ஏப்.30 2025: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நான்காவது ஓடுபாதை மூடப்பட்டதாலும், கிழக்கு திசையில் இருந்து வீசிய காற்றாலும் திங்கள்கிழமை (ஏப்.29 2025) 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
இந்நிலையில், விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃபிளைட் ராடார்24, சராசரி தாமத நேரம் 30 நிமிடங்கள் என்று கூறியுள்ளது. இதற்கிடையில், எந்த விமானங்களும் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நான்காவது ஓடுபாதை மே முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மே 4 வரை டெல்லி மீது கிழக்கு காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சர்வதேச மற்றும் ஒழுங்குமுறை நெறிமுறைகளின்படி, பயணிகளின் பாதுகாப்பை மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கொண்டு, பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக, விமான வருகைக்கான விமானப் போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ATC (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு) அதிகாரிகளால் செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏப்.28ஆம் தேதி 200 விமானங்கள் தாமதமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘இது காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல’; காங்கிரஸ் அதிரடி அறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com