illegal Bangladeshi immigrants arrested: குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1,000 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
illegal Bangladeshi immigrants arrested: குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1,000 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Published on: April 26, 2025 at 7:20 pm
அகமதாபாத், ஏப்.26 2025: குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் சூர்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தங்கி இருந்த சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினரை மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
இன்று (ஏப்.26 2025) நடந்த இந்த அதிரடி நடவடிக்கைக்கு, சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG), குற்றப்பிரிவு, மனித கடத்தல் தடுப்புப் பிரிவு (AHTU), குற்றப்பிரிவு தடுப்பு (PCB) மற்றும் உள்ளூர் காவல் குழுக்கள் உள்ளிட்ட பல அமலாக்கப் பிரிவுகள் தலைமை தாங்கின.
இந்த நிலையில், கிட்டத்தட்ட 1000 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அதிகாலை 3 மணியளவில் அகமதாபாத்தில் 450 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சந்தோலா பகுதியில் ஆவணமற்ற குடியேறிகள் அதிக அளவில் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் கைது
#WATCH | Ahmedabad, Gujarat: This morning, starting from 3 am, the Ahmedabad Crime Branch, along with teams from the SOG, EOW, Zone 6, and Headquarters, organised a combing operation to apprehend foreign immigrants residing illegally in Ahmedabad city. During this operation, more… pic.twitter.com/lYXvQiz0VV
— ANI (@ANI) April 26, 2025
இதற்கிடையில், இந்த நடவடிக்கையின் போது 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் அஜித் ராஜியன் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அகமதாபாத்தின் குற்றப்பிரிவு இணை காவல் ஆணையர் ஷரத் சிங்கால் பேசுகையில், “ஏப்ரல் 2024 முதல், இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் 127 சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 77 பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்; பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com