lic aao exam 2025: எல்ஐசி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
lic aao exam 2025: எல்ஐசி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: April 27, 2025 at 5:32 pm
புதுடெல்லி, ஏப். 27 2025: லைஃப் இன்சுரன்ஸ் கார்பரேஷன்(எல்.ஐ.சி) 2025 ஆம் ஆண்டுக்கான உதவி நிர்வாக அதிகாரி (AAO) பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி வரம்புகள் குறித்து பார்க்கலாம்.
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் அறிவியல், கலை, வர்த்தகம், பொறியியல் போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் போது தகுதிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம்: 21 வயது
அதிகபட்சம்: 30 வயது வரை இருக்கலாம்.
பிற தகுதிகள்
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் LIC AAO விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன், தங்கள் தகுதியை நிரூபிக்க அனைத்து செல்லுபடியாகும் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை, தேர்வு செயல்முறைகள், தேர்வு மையங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை LIC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் LIC AAO 2025-யில் அறியலாம்.
இதையும் படிங்க சென்னை ஐகோர்ட்டில் பணி: எப்படி விண்ணப்பிப்பது, தேர்வு முறை என்ன? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com